சம்பளம் தராத உணவு விடுதி உரிமையாளரை பழிவாங்கிய செஃப்
இங்கிலாந்து நாட்டின் லிங்கன் நகரத்தில் ராயல் வில்லியம் என்ற உணவு விடுதி ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. அதில் சமையற்கலை நிபுணராக டோனி வில்லியம்ஸ் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த விடுதியின் உரிமையாளர் வில்லியம்ஸுக்கு சம்பளத்தை சரியாக தராததால் இருவருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதனால் தனது வேலையை வில்லியம்ஸ் ராஜினாமா செய்துள்ளார்.
ராஜினாமா செய்தவர் உணவக உரிமையாளரை பழிவாங்க எண்ணியுள்ளார். இதற்காக சுமார் 10 கரப்பான்பூச்சிகளை உணவகத்தின் சமையலறைக்குள் அவர் விட்டுள்ளார். இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியிருந்த நிலையில் உடனடியாக உணவகம் மூடப்பட்டது.
இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள வில்லியம்ஸ் 17 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். மூடப்பட்ட உணவகத்தில் கரப்பான் பூச்சிகளை நீக்கி சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறதாம்.