Ads
ஜனாதிபதி தலைமையில் நாளை சர்வகட்சிக் கூட்டம்
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் சர்வகட்சிக் கூட்டம் நாளை(வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் மாலை 4.00 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இந்த சர்வகட்சிக் கூட்டத்தில் சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் உள்ளிட்ட நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads