Category:
Created:
Updated:
சீனாவில் தற்போது பிஎஃப்-7 உருமாறிய கொரொனா தொற்று பெரும் பாதிப்புகள் ஏற்படுத்தி வருகிறது.
இத்தொற்றுகள் இந்தியா, தென் கொரியா, ஹாங்காங், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அண்டை நாடான ஜப்பானிலும் இத்தொற்று வேகமாகப் பரவி வருகிறது.
ஜப்பானில் நேற்று ஒரே நாளில் மட்டும் 420 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 1,92,063 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டோக்கியோவில் மட்டும் 18,732 பேருக்கு இத்தொற்று உறுதியாகியுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.