Ads
கொரோனா கால நர்சுகளுக்கு பணி நீட்டிப்பு இல்லை - தமிழக அரசு அரசாணை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் போது கடந்த 2 ஆண்டுகளாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒப்பந்த அடிப்படையில் நர்சுகள் நியமிக்கப்பட்டார்கள். அதன்படி சுமார் 2 ஆயிரத்தி 300-க்கும் மேற்பட்ட நர்சுகள் ஒப்பந்த அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் நியமிக்கப்பட்டனர். இந்த ஒப்பந்த நர்சுகளின் பணிகாலம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் கொரோனா கால நர்சுகளுக்கு பணி நீட்டிப்பு இல்லை என தமிழக சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு எம்.ஆர்.பி. செவிலியர் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Info
Ads
Latest News
Ads