நிலக்கரி கொள்வனவு மோசடி தொடர்பில் நான் முன்வைத்த குற்றச்சாட்டு பொய் என்றால் தண்டனை ஏற்க தயார் : ஓமல்பே சோபித தேரர்
நிலக்கரி கொள்வனவு மோசடி தொடர்பில் நான் முன்வைத்த குற்றச்சாட்டு பொய் என்றால் தண்டனை ஏற்க தயார். குற்றச்சாட்டு உண்மையாயின் மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர பதவி விலக வேண்டும் என மக்கள் பேரவை அமைப்பின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள மக்கள் பேரவை காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியிலும் அரச நிதி மோசடிகளுக்கு குறையேதும் இல்லை.நிலக்கரி கொள்வனவில் இடம் பெற்ற மோசடி தொடர்பில் ஜனாதிபதி விசாரணை குழு ஒன்றை நியமிக்குமாறு வலியுறுத்தியுள்ளேன்.
நிலக்கரி கொள்வனவு மோசடி தொடர்பில் நான் முன்வைத்த குற்றச்சாட்டு பொய் என்றால் தண்டனை ஏற்க தயார்,குற்றச்சாட்டு உண்மையாயின் மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர பதவி விலக வேண்டும் என்றார்.