Category:
Created:
Updated:
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி நேற்று நாடு முழுவதும் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் கொரோனா அவசரகால ஒத்திகை நடைபெற்றது. தமிழ்நாட்டிலும் பல மருத்துவமனைகளில் அவசரகால ஒத்திகை நடைபெற்ற நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நடைப்பெற்ற ஒத்திகைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1.75 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், மக்கள் முககவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துவதுடன், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.