மூக்கு வழியாக செலுத்தும் இன்கோவேக் தடுப்பு மருந்து
இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கிய நிலையில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசர கால அனுமதி வழங்கியது. அதன்பேரில் இதுவரை 200 கோடி டோஸ் தடுப்பூசிகள் இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கின் வழியாக செலுத்தும் கொரோனா மருந்தான இன்கோவேக் (iNCOVACC) மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு சொட்டு மூக்கின் வழியாக செலுத்தப்படும் இந்த மருந்து கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த மருந்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில் தற்போது பாரத் பயோடெக் நிறுவனம் இதன் விலையை அறிவித்துள்ளது. அதன்படி அரசாங்கத்திற்கு ஜிஎஸ்டி வரி இல்லாமல் இந்த மருந்து ரூ.325க்கு விநியோகம் செய்யப்படும். தனியார் மார்க்கெட்டில் இதன் விலை ரூ.800 ஆக விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் இந்த மருந்தின் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.