Ads
இந்தியாவில் 23 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்
இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் இருபத்தி மூன்று லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் முறைகேடாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்கள் குறித்த அறிக்கையை மத்திய அரசுக்கு சமூக வலைதளங்கள் அளித்து வருகின்றன. அந்த வகையில் வாட்ஸ்ஆப் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் இருபத்தி மூன்று லட்சத்து இருபத்தி நான்காயிரம் கணக்குகளை முடக்கி உள்ளதாக அறிவித்துள்ளது.
இதில் பெரும்பாலான கணக்கூகள் விதிமுறைகளை மீறி செயல் பட்டதன் காரணமாகவும், ஒரு சில கணக்குகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாகவும் முடக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் 23 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Info
Ads
Latest News
Ads