Category:
Created:
Updated:
கோட்டாபய ஜனாதிபதியாக இருந்த போது தனது கணவருக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலானி பிரேமதாச, தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதாக சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
“எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமல்ல, அவரது மனைவியும் கோட்டாபய ராஜபக்சவை அழைத்து சஜித்தை பிரதமராக்க வாய்ப்பளிக்குமாறு கோரி இருந்தார். கோட்டாபய ராஜபக்ஷ இதை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்” என்று டயானா கூறினார்.
சஜித் தொடர்ந்தும் போராட்டங்களை நடத்தினால் மக்கள் வீதியில் இறங்கி அடிப்பார்கள் என்றும் “இந்த நாட்டைக் காப்பாற்றும் முயற்சிகளை நாசப்படுத்துவதை நிறுத்துங்கள்” என்றும் டயானா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.