நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து பொருட்களின் பற்றாக்குறைக்கு நிதி நெருக்கடி காரணமல்ல : ராஜித்த சேனாரத்ன
நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து பொருட்களின் பற்றாக்குறைக்கு நிதி நெருக்கடி காரணமல்ல என முன்னாள் சுகாதார அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். மருந்து பொருட்களை முன்பதிவு செய்வதில் ஏற்பட்ட காலதாமதத்தினால் இறக்குமதி செய்வதில் ஏற்பட்ட சிக்கல் நிலையே இதற்கு காரணமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டிற்கு உயிர் பாதுகாப்பு மருந்துகள் 14, அத்தியாவசிய மருந்துகள் 636, அத்தியாவசியமற்ற மருந்துகள் 400 என மொத்தமாக அரசாங்கத்திற்கு 1050 மருந்துகள் அவசியமாகும். எனினும் அத்தியாவசிய மருந்துகள் 636 இல் 185 மருந்துகள் நாட்டில் இல்லை. அத்தியாவசியமற்ற மருந்துகள் 400 இல் 190 மருந்துகள் இல்லை.
உயிர்பாதுகாப்பு மருந்துகளில் டீ என் டீ முழுமையாக தீர்ந்துவிட்ட நிலை காணப்படுகின்றது. மாரடைப்பு நோயாளிகள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசாங்கம் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் வழிகாட்டலின் கீழ் செயற்படாமல் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய செயற்பட வேண்டும் என ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டார். அரசாங்கம் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் வழிகாட்டலின் கீழ் செயற்படாமல் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய செயற்பட வேண்டும் என ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டார்.