Category:
Created:
Updated:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரை சாலையில் நேற்று இரவு கடலோர போலீசார் அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த காரில் 25 லிட்டர் தண்ணீர் கேன்கள் 30 இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளார். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், காரில் இருந்த ஜெயினுதின், சார்பாஸ்நவாஸ் ஆகிய இருவரும் தண்ணீர் கேன்களில் கொக்கேன் போதைப்பொருளை அடைத்து வைத்து இலங்கைக்கு கடத்த முயன்றுள்ளனர். இவர்கள் போலீசாரின் சோதனையில் பிடிப்பட்டுள்ளனர். தண்ணீர் கேன்களில இருந்த போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு பல கோடி இருக்கும் என்பது தெரியவந்துள்ளது.