Ads
அரசு பணிக்கு திருநங்கைகள் பொதுப்பிரிவில் விண்ணப்பிக்கலாம் - மேற்குவங்காளம் அரசு
சமுதாயத்தில் மூன்றாம் பாலினத்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ள திருநங்கைகளின் முன்னேறத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், அரசு பணிக்கு திருநங்கைகள் பொதுப்பிரிவில் விண்ணப்பிக்கலாம் என்று மேற்குவங்காள அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மேற்குவங்காள அமைச்சரவை கூட்டத்தில் இன்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசு பணிக்கு திருநங்கைகள் பொதுப்பிரிவில் விண்ணப்பிக்க அனுமதி அளிப்பது தொடர்பான மசோதா அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக அமல்படுத்தப்படும் பட்சத்தில் மேற்குவங்காள அரசுப்பணியில் ஆண்கள், பெண்கள் போன்று திருநங்கைகளும் பொதுப்பிரிவில் விண்ணப்பிக்கலாம். மேற்குவங்காள அரசின் முடிவிற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Info
Ads
Latest News
Ads