மக்களை காக்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்கு இல்லையா? எம்பி ஜோதிமணி கேள்வி
மக்களை காக்க வேண்டிய பொறுப்பு ? ஒன்றிய அரசுக்கு இல்லையா என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2018-2019 ஆம் ஆண்டு கேரள வெள்ளத்தின்போது அம்மா நிலத்திற்கு வழங்கப்பட்ட 89 டன் அரசிக்கான தொகை ரூ.205.81 கோடியை தரவேண்டுமென மத்திய அரசு கேட்டுள்ளது. அத்தொகையை தராவிட்டால், இந்த ஆண்டிற்காக மா நில பேரிடர் மேலாண்மை துறையின் ஒதுக்கீட்டில் ஈடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
எனவே இத்தொகையை வழங்க முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தன் டுவிட்டர் பக்கத்தில் ,
‘’இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ளும் மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்குத் தான் உள்ளதா? ஒன்றிய அரசுக்கு இல்லையா? பிறகெதற்கு வரியென்ற பெயரில் கொள்ளை அடிக்கிறது மோடி அரசு?
வரியையும்,மக்களையும் மாநில அரசே பார்த்துக்கொள்ளலாமே. வரி என்ற பெயரில் கொள்ளை அடித்துவிட்டு, மக்களுக்கும், மாநில அரசுகளுக்கும் கொடுக்காமல் வயிற்றில்.அடிக்கும் மோடி அரசை நினைத்தால் " வானம் பொழிகிறது,பூமி விளைகிறது உனக்கேன் கொடுக்கவேண்டும் கிஸ்தி ..." எனும் வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம் தான் நினைவுக்கு வருகிறது .’’ என்று தெரிவித்துள்ளார்.