Category:
Created:
Updated:
பொருளாதார நெருக்கடியை தீர்க்கும் வரை முன்கூட்டியே நாடாளுமன்றத்தை கலைக்கப்போவதில்லை. போராட்டக்காரர்கள் என்னை சர்வாதிகாரி என்றும் அழைக்கலாம். ஆனால் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தவும், சாலை மறியலில் ஈடுபடவும் அவர்கள் நிச்சயம் போலீசாரிடம் அனுமதி வாங்கித்தான் ஆக வேண்டும். நாட்டில் மிகப்பெரிய அளவிலான மற்றுமொரு மக்கள் போராட்டத்துக்கு திட்டமிடுவதாக தெரிகிறது. ஆனால் அதை நான் அனுமதிக்கமாட்டேன். அப்படி போராட்டங்கள் நடத்த முயற்சித்தால் ராணுவம் மற்றும் அவசர சட்டங்களை பயன்படுத்தி அவற்றை ஒடுக்குவேன் என்று ரணில் விக்ரமசிங்கே கூறினார்.