Category:
Created:
Updated:
யாழில் ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்காகி மாணவரொருவர் யாழ்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.யாழில் பிரபல பாடசாலையொன்றில் தரம் 10 இன்று கல்வி கற்கும் மாணவரொருவரை ஆசிரியர் தாக்கியதில் குறித்த மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த மாணவனை தடிகளால் பல முறை தாக்கிய ஆசிரியர் தடி முறிந்த நிலையில் தனது கையால் மாணவனின் நெற்றியில் அடித்துள்ளார்.இதன்போது சம்பவம் தொடர்பில் கல்லூரியின் அதிபரை தொடர்பு கொண்டு கேட்ட போது சம்பவம் தொடர்பில் தான் அறியவில்லை எனவும், இது குறித்து ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளார்.