குறைந்த விலையில் பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்கள் வழங்குவது குறித்து ஆராய்வு
ஊடகங்களில் வெளியான பாடசாலை உபகரணங்களின் விலை மும்மடங்காக வெளியிடப்பட்டதனையடுத்து இச்செய்தி தொடர்பில் கவனம் செலுத்திய கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, உரிய அதிகாரிகளை அழைத்து விசேட அவசர கலந்துரையாடலை நடாத்தி, குறைந்த விலையில் மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்களை வழங்கும் வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்தார்.அந்த கலந்துரையாடலில் அரச வங்கியில் கடன் வசதி பெற்று பயிற்சி புத்தகங்களை அச்சிடப்போவதாக அமைச்சர் அறிவித்துள்ளார். மானிய விலையிலும் பயிற்சிப் புத்தகங்கள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை இன்று (18ம் திகதிக்குள் கல்வி அமைச்சிடம் ஒப்படைக்குமாறும் அரச அச்சக கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.இதேவேளை, பயிற்சி புத்தகங்கள் மற்றும் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு நான்கு அதிநவீன அச்சு இயந்திரங்களை அரச அச்சக கூட்டுத்தாபனத்திற்கு கொள்வனவு செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.