மத்தியதரை கடலில் இதுவரை 5, 000க்கு அதிகமான புகழிடக் கோரிக்கையாளர்கள் உயிர் இழந்துள்ளதாக IOM சுட்டிக் காட்டுகின்றது.
சட்டவிரோத கடல் பயணங்களை மேற்கொண்டு 2014- 2022 வரையான காலப்பகுதியில் மத்திய தரைக்கடலில் 5,000க்கு அதிகமானோர் வாழ்க்கையினை கடலில் முடிவுறுத்திக் கொண்டுள்ளதாக புலம் பெயர்தல் தொடர்பான சர்வதேச அமைப்பு (IOM) 2021 முதல் (24 அக்டோபர் 2022 நிலவரப்படி) மத்திய மத்திய தரைக்கடல் பகுதியில் 2,836 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஸ்பானிய கெனரி தீவுகளுக்கு மேற்கு ஆபிரிக்கா-அட்லாண்டிக் கடல் பாதை மார்க்கம் ஊடாக பயணித்தவர்களில் 1,532 பேர் கடலில் உயிரிழந்துள்ளனர் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.மொத்தத்தில், 2014 மற்றும் 2021 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஐரோப்பாவிற்குச் செல்லும் வழிகளில் தங்கள் உயிரை இழந்த 17,000 க்கும் அதிகமானோர் பூர்வீக நாடு பற்றிய எந்த தகவலும் இல்லாமல் பட்டியலிடப்பட்டுள்ளனர் என புலம்பெயர்தல் தொடர்பான சர்வதேச அமைப்பு சுட்டிக் காட்டுகின்றது.அத்துடன் மேற்கு ஆப்பிரிக்கா ஊடாக கனடாவுக்கு நுழைய முற்பட்ட பலரும் கப்பல் விபத்துகளில் உயிரிழந்துள்ளார்.