Ads
எரிபொருள் விலைச்சூத்திரம் தொடர்பில் வெளியான புதிய தகவல்!
எரிபொருள் விலை தொடர்பான சூத்திரத்தை குறிப்பிட்ட திகதியில் நடைமுறைப்படுத்துவதில்லை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக பெற்றோலிய பொருட்கள் விநியோகிப்போர் சங்கம் தெரிவித்துள்ளது.விலைச்சூத்திரத்தை அமுல்படுத்தும் திகதியை, அன்றிரவிலேயே அறிவிப்பதற்கு அமைச்சர் இணக்கம் தெரிவித்ததாக அதன் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்தார்.குறிப்பிட்ட திகதிகளில் விலைச்சூத்திரத்தை அமுல்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் எடுத்துக் கூறியதன் பின்னர் இந்த விடயத்துக்கு அவர் தனது இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளார்.எதிர்காலத்தில் தட்டுப்பாடு இன்றி எரிபொருள் விநியோகிக்கப்படும் என நம்புவதாக சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன மேலும் தெரிவித்தார்.
Info
Ads
Latest News
Ads