Ads
நாட்டிற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டா தேவையில்லை என்று முதலாவதாக சொன்ன கட்சி நாங்கள் தான் - இரா. சாணக்கியன்
இந்த நாட்டிற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டா தேவையில்லை என்று முதலாவதாக சொன்ன கட்சி நாங்கள் தான்.இந்த மாவட்டத்தில் அவருக்கு வாக்களிக்க நாங்கள் சொல்லவில்லை. எத்தனையோ தமிழ் மக்களை நாட்டை விட்டு வெளியேற்றிய கோட்டாபய ராஜபக்ஷவினை நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளோம். ஆனால் அவர்களுடைய பிரதிநிதிகளாக மாவட்டத்தில் சிலர் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் கும்புறுமூலை கிராம அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு தொகுதி தளபாட உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Info
Ads
Latest News
Ads