Ads
சில்லறை விலையில் சிகரெட் விற்பனைக்கு தடை?
நாட்டில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 9.1 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது.அத்துடன், புகைப்பிடிப்பவர்களில் 51 சதவீதமானவர்களில் அதிலிருந்து விலகுவார்கள் என தாம் நம்புவதாக அந்த அதிகார சபையின் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.வர்த்தக நிலையங்களில் சிகரெட் சில்லரை விலைக்கு உள்ளதே அவர்களுக்கு அதிலிருந்து விடுபட தடையாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே, அதற்கு தடை விதிப்பதுடன், சிகரட்டிற்கான விலை மேலும் அதிகரிக்கப்பட்டு, அதற்காக விலைச்சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
Info
Ads
Latest News
Ads