Ads
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா தொற்று
திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் எம்.பி.யுமான டி.ஆர். பாலுவுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா பாதிக்கப்பட்டுள்ள டி.ஆர். பாலுவின் உடல்நிலை சீராக உள்ளது என்று அவரது மகனும் மன்னார்குடி எம்எல்ஏவுமான டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது தந்தையார் திரு டிஆர்பாலு அவர்களுக்கு #கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது. கடந்த ஒரு வாரமாக அவரை சந்தித்தவர்கள் தயவுகூர்ந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Info
Ads
Latest News
Ads