Category:
Created:
Updated:
எதிர்வரும் டிசெம்பர் மாதம் 8ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமாயின் அரசாங்கம் கவிழும் அபாயம் காணப்படுவதாக அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். 21ஆவது அரசியலமைப்பு திருத்தத்க்கு வாக்களிக்க வராத அரசாங்க எம்.பிக்கள், வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பிலும் அவ்வாறே செயற்பட வாய்புள்ளதாக குறிப்பிட்டார்.
வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படும் பட்சத்தில் அரசாங்கத்தை கலைக்க வற்புறுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திடம் தற்போது 8 முதல் 12 எம்.பி.க்கள் மட்டுமே பெரும்பான்மையாக இருப்பதாகத் தெரிவித்த அவர், அரசாங்கத்தின் ஒரு சிறிய பகுதியினரும் வாக்களிப்பில் இருந்து விலகினால் வரவு செலவுத் திட்டம் நிச்சயமாக தோற்கடிக்கப்படும் என தெரிவித்தார் .