ராஜபக்சக்கள் காலிங்க மாகான் தலைமுறையினருக்கே சொந்தமானவர்கள் : எதிர்க்கட்சித் தலைவர்
சுபிட்சத்தின் தொலைநோக்கை முன்னிலைப்படுத்தி நாட்டிற்கு சுபீட்சத்தை கொண்டு வர 2019 ஆம் ஆண்டு வீராப்பு பேசி ராஜபக்சக்கள் வந்தாலும், இறுதியில் செல்வத்தையே இழக்கும் அளவிற்கு நாட்டை வக்குரோத்தாக்கினர் எனவும், மலைநாட்டு கிளர்ச்சியில் வெள்ளையர்களைப் போலவே கலிங்க மாகனின் படையெடுப்புகளாலும் நாட்டிலுள்ள களஞ்சியங்கள் உட்பட அனைத்து தோட்டங்களையும் அழித்தது போல், இவர்களும் கடந்த காலத்தைப் போலவே நாட்டின் விவசாயத்தையும் முற்றிலுமாக அழித்தார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (27) தெரிவித்தார்.எனவே, ராஜபக்சக்கள் காலிங்க மாகான் தலைமுறையினருக்கே சொந்தமானவர்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவரும், நாட்டை விட்டு தப்பி ஓடிய பசில் ராஜபக்சவும் ஆச்சரியமான முன்னோக்கிய மாற்றத்தை ஏற்படுத்த மீண்டும் வருவதாக மொட்டுக் கட்சியின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டாலும், இந்நாட்டை வங்குரோத்தடையச் செய்த குற்றத்தின் முக்கிய குற்றவாளி அவர் எனவும், அவர் மிகுந்த ஊழல்வாதி எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பழமையான நாகரீகத்தையும், பழமையான கலாசாரத்தையும் கொண்டிருந்த எமது நாடு தற்போது உலக நாடுகளிடம் பிச்சை எடுக்கும் நிலைக்கு ராஜபக்சர்களால் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மொட்டுவின் செயலாளர் வருவதாகக் கூறும் நபர், நாட்டை அழித்த கலிங்க மகான் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.