Category:
Created:
Updated:
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை தொடர்பில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.2021 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் நவம்பர் 10 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிலையத் தளபதிக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. சட்டத்தரணிகள் குழு முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.