இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பெரும் நிதி மோசடி குறித்து வௌியான தகவல்கள்
கிரிப்டோகரன்சி முறையில் நடத்தப்பட்ட பெரும் நிதி மோசடி குறித்த தகவல்களை வெளிக்கொண்டு வர முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் பெண்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து இந்த உண்மைகள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
ஸ்பாட் செயின் எனப்படும் பிரமிட் வகை நிதி மோசடி குறித்து முறைப்பாடுகள் வந்ததாகவும், இந்த வியாபாரம் தொடர்பான விசாரணையில், கீர்த்தி பண்டார என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் ஷாங்காய் என்ற சீன ஆணுடன் தொடர்பில் இருந்ததாகவும் அவருடைய காதலி வான் என்ற பெண் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த மூவரும் சேர்ந்து இந்தத் தொழிலை நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.