Category:
Created:
Updated:
மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகளை முன்வைக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தமக்கு கிடைத்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்காலத்தில் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த யோசனைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.