பேலியகொடை மீன் சந்தைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்
பேலியகொடை மீன் சந்தையின் கழிவகற்றல் கட்டமைப்பினை சீர்செய்து சுகாதார நிலையை மேம்படுத்துவது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பேலியகொடை மத்திய மொத்த மீன் விற்பனை நிலையத்திற்கு நேற்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் மீன் சந்தை வளாகத்தினை பார்வையிட்டார்.
வடிகான் கட்டமைப்புக்கள் செம்பையாக பராமரிக்கப்படாமல் இருப்பதனை அவதானித்த அமைச்சர், அதற்கான கராணத்தை வினவியதுடன் அதனை உடனடியாக திருத்துவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் பணிப்புரை வழங்கினார். மீன்களை வெட்டுவதற்கான பிரிவொன்று ஏற்படுத்தப்படுவது உட்பட பல்வேறு கோரிக்ககைகள் இதன்போது அதிகாரிகளினால் அமைச்சரிடம் முன்வைப்பட்டது.
அதிகாரிகளின் கருத்துகளை செவிமடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விடயங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி நடவடிக்ககை மேற்கொள்ள்ளப்படும் என்று தெரிவித்தார்.