அரசாங்கம் எடுத்த பொறிமுறை தவறானது – அனுர
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த முடிவுக்கு மக்கள் விடுதலை முன்னணி பாராட்டு தெரிவித்துள்ளது.
இருப்பினும் அதனை வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த பொறிமுறை தவறானது என அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த முடிவு புத்தாண்டு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது என்றும் இது அரசாங்கத்தின் இயலாமையைக் காட்டுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
1,000 ரூபாய்க்கு அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ளல் உட்பட பல்வேறு தோல்வியுற்ற முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் 5,000 கொடுப்பனவு வழங்குவதற்கான முடிவு எட்டப்பட்ட நேரத்தில், அரசாங்க விடுமுறை அறிவிக்கப்பட்டது என்றும் நாடு, பொருளாதாரம் அல்லது மக்கள் மீதான அக்கறை குறித்து அதிகாரிகளுக்கு புரிதல் இல்லை என்பதை இந்த முடிவு காட்டுகிறது என்றும் அனுரகுமார திஸாநாயக்க குற்றம்சாட்டினார்.