Ads
ஓய்வு பெறும் வைத்தியர்களின் சேவை காலத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்க அமைச்சரவை அனுமதி
ஓய்வு பெறும் வைத்தியர்களின் சேவை காலத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துலகுனவர்தன நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்60 வயதில் வைத்தியர்கள் ஓய்வு பெறுவதால் சுகாதாரத் துறையில் ஏற்படக்கூடிய பிரச்சனை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவையின் உபகுழுவின் அறிக்கையினை ஆராய்ந்த போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
Info
Ads
Latest News
Ads