இந்திய கடற்றொழிலாளர் விவகாரத்தை சிலர் தவறாகச் சித்தரித்து வருகின்றனர் – டக்ளஸ்
அத்துமீறி எல்லைதாண்டி சட்டவிரோத தொழில் முறைகளை பயன்படுத்துகின்ற இந்திய கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பாக பல்வேறு வழிமுறைகள் பரசீலிக்கப்பட்டு வருகின்றதே தவிர தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த யோசனையை சிலர் மிகைப்படுத்தி தவறாகச் சித்தரித்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி அரசியல் நிகழ்வொன்றில் குறித்த விடயம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேசிய நீரோட்டம், பாராளுமன்ற ஜனநாயகம், தேசிய நல்லிணக்கம் ஊடான பாதையே எமது மக்களின் பிரச்சினைகளுக்கான சிறந்ததொரு தீர்வை தரும் என கூறி அதன்வழியில் அனைவரும் பயணிக்க வருமாறு கோரியிருந்தேன். ஆனால் எனது அழைப்பை துரோகம் என்று பிரபாகரனது புராணம் பாடியவர்கள் கூறிவந்தார்கள். இன்று ஏற்றுக்கொள்கின்றனர்" என்றும் கூறினார்.