Ads
காளஹஸ்தி கோவிலில் அர்ச்சகர்கள் உள்பட 5 பேருக்கு கொரோனா
ஆந்திராவில் கொரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. காளஹஸ்தி சிவன் கோவிலில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சித்தூர் மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனையை நிர்வாகம் மேற்கொண்டது. அதில் வங்கி கவுண்டரில் பணிபுரியும் ஊழியர்கள் 3 பேர், அர்ச்சகர்கள் 2 பேர் என மொத்தம் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அனைத்து ஊழியர்களும் கொரோனா பரிசோதனை செய்யவும், தடுப்பூசி போடவும் உடனடியாக உத்தரவிடப்பட்டது.
Info
Ads
Latest News
Ads