Ads
யாழ் மாநகர சந்தையுடன் தொடர்புடைய மேலும் 22 பேருக்கு கொரோனா
யாழ்ப்பாணம் மாநகர சந்தையுடன் தொடர்புடைய மேலும் 22 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சந்தையிலுள்ள வர்த்தகர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய தொடர்புடையவர்கள் உள்ளிட்ட 431 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 34 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது. .
அவர்களில் 22 பேர் யாழ்ப்பாணம் மாநகர சந்தையுடன் தொடர்புடையவர்கள் எனவும் ஏனைய 12 பேரும் முன்னதாக தொற்று உறுதியானவர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
Info
Ads
Latest News
Ads