Ads
துருக்கியில் மேலும் 50,678 பேருக்கு கொரோனா பாதிப்பு
துருக்கி நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் 2-வது அலை காரணமாக பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் துருக்கி தற்போது 7-வது இடத்தில் உள்ளது. துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 50,678 ஆக பதிவாகி உள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 38,49,011 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கொரோனா பாதிப்பு காரணமாக 237 பேர் உயிரிழக்க, கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 33,939 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து இதுவரை 33,31,411 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 4,83,661 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Info
Ads
Latest News
Ads