15 நாளைக்கு முழு ஊரடங்கு - சுகாதாரத்துறை அமைச்சர்
கொரோனா தொற்று பரவல் மகாராஷ்டிரா முழுவதும் அதிகரித்து வருவதால் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் இன்று நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, கொரோனா நெறிமுறைகள் கண்டிப்பாக அமல்படுத்தப்படுகிறது.
ஆனாலும், ஒவ்வொருவருக்கும் சுய ஒழுக்கம் என்பது காலத்தின் தேவை. தடுப்பூசி போடுவது முக்கி்யமானது. தடுப்பூசியில் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியா அதிக வேகத்தில் இருக்கிறது. மகாராஷ்டிராவும் இருக்கும் வேகத்திற்கு தடுப்பூசிகளை சப்ளை செய்ய மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம். மத்திய அரசும் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், முழு ஊரடங்கு அவசியம். 15 நாளைக்கு முழு ஊரடங்கு தேவை என்று பரிந்துரைத்தார். இதுகுறித்த இறுதி முடிவு முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அமைச்சரவையில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.