சமூக வலைதளங்களில் உலா வரும் புதிய கருத்துக் கணிப்பு - அதிர்ச்சியில் திமுக
இளைஞர்களுக்கான கல்விக்கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு அறிவிப்புகளால், மக்கள் நிச்சயம் திமுகவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வார்கள் என ஸ்டாலின் நம்பிக்கையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், தேர்தல் முடிந்து 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்ற கருத்துக் கணிப்பின் விபரங்கள் வைரலாகி வருகிறது.
அதாவது, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அதிமுக 113 இடங்களையும், திமுக 80 இடங்களையும் கைப்பற்றும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, 29 தொகுதிகளில் இரு கட்சிகளுக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், திமுகவிற்கு 4 தொகுதிகளும், அதிமுகவிற்கு 8 தொகுதிகளிலும் முன்னிலைப் பெறும் என அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த கணக்குபடி பார்த்தால், 113 தொகுதிகளில் வெற்றி பெறும் அதிமுக, முன்னிலை கிடைக்கும் 8 தொகுதிகளில் 4 ல் வெற்றி பெற்றாலே ஆட்சியைக் கைப்பற்றி விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அதிமுக நிச்சயம் ஹாட்ரிக் வெற்றி பெற்று, எடப்பாடியாரின் நல்லாட்சி தொடரும் எனக் கூறி அக்கட்சியினர் இந்த தகவலை பரப்பி வருகின்றனர்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் பெற்றுள்ள வாக்குகளும், திமுகவினரின் வெற்றிக்கு சிக்கலை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, நகர்ப்புறங்களில் மக்கள் நீதி மய்யமும், கிராமப்புறங்களில் நாம் தமிழர் கட்சியும், திமுகவிற்கு விழும் வாக்குகளை இழுத்துக் கொண்டுள்ளன. தற்போது, 72.78 சதவீத வாக்குகளே பதிவாகி இருப்பதால், இரட்டை இலைக்கு விழும் வாக்குகள் விழுந்தாலே மீண்டும் எடப்பாடியார் அரியணையில் அமர்ந்து விடுவார் என்றே அந்தக் கணிப்பில் தெரிய வருகிறது.