கோட்டாபயவின் நிழல் அரசாங்கமே இன்னும் நாட்டை ஆட்சி செய்கின்றது - சஜித் பிரேமதாஸ
கோட்டாபயவின் நிழல் அரசாங்கமே இன்னும் நாட்டை ஆட்சி செய்வதோடு உலகம் முன்னோக்கி நகர்ந்தாலும் எமது நாடு அதே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஜனாதிபதியும் அரசாங்கமும் ஒரே இடத்தில் சுழன்று கொண்டிருப்பதோடு, அவர்களுக்கு நாடு செல்லும் திசை பற்றிய புரிதல் இல்லை. நாடு இவ்வாறானதொரு இக்கட்டான நிலையிலுள்ள போதும் அமைச்சரவை நிதியை சுரண்டுவதோடு குறைந்த பட்சம் அரசாங்கத்திற்கு எதற்கும் எந்த வேலைத்திட்டமும் இல்லை எனவும் பிரதான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
வெல்லவாய , தனமல்வில பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டங்களில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
கோப் குழு மற்றும் கோபா குழுவின் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்படும் என்று சபாநாயகர் கூறினாலும் ரணில் விக்கரமசிங்க ராஜபக்ஷ குடும்பத்தை பாதுகாப்பதால் தலைவர் பதவி கனவாகவே உள்ளது.
ராஜபக்ஷ விசுவாசமானவர்கள் தான் தேசிய பேரவைக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். ரணில் விக்ரமசிங்க கூட காக்கை நிதி அமைச்சரின் உத்தரவின் கீழே செயற்படுகிறார் இந்நிலையில் கோட்டாபயவின் நிழல் அரசாங்கமே இன்னும் நாட்டை ஆட்சி செய்து வருகிறது என சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.