சினிமா செய்திகள்
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
காலத்தால் அழியா கலைஞன் குலதெய்வம் ராஜகோபால்
விவேக்கிற்கு முன்பே ‘சின்னக் கலைவாணர்’ என்ற பட்டத்தைப் பெற்றவர் குலதெய்வம் ராஜகோபால். ஓப்பீடே இல்லாத நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கலைஞர். தனது நகை
Ads
 ·   ·  7514 news
  •  ·  5 friends
  • I

    9 followers

99 வயதில் மரணம் அடைந்த இளவரசர் பிலிப் பற்றிய சில தகவல்

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப். இதயக் கோளாறால் அவதிப்பட்டு வந்த பிலிப் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 99.

வருகிற ஜூன் 10-ந் தேதி 100-வது பிறந்தநாள் கொண்டாட இருந்த நிலையில் அவர் காலமானார். கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி இதயக்கோளாறு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

20 நாட்கள் சிகிச்சை பெற்று அரண்மனைக்கு திரும்பி இருந்த நிலையில் இறந்தார். அவரது மறைவுக்கு இங்கிலாந்து பிரதமர் மோரிஸ் ஜான்சன், இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கிரீஸ் டென்மார்க் அரச குடும்பத்தில் 1921-ம் ஆண்டு கோர்பு என்ற தீவில் பிலிப் பிறந்தார். பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கல்வி பயின்றார்.

1934-ம் ஆண்டு எலிசபெத்தை முதல் முறையாக பிலிப் சந்தித்தார். பின்னர் 1939-ம் ஆண்டு 2-ம் உலகப்போர் நடந்த போது ராணி எலிசபெத்-பிலிப் இடையே பேச்சுவார்த்தைகள், சந்திப்புகள் அடிக்கடி நடந்தது. இதில் இருவரும் காதலில் விழுந்தனர்.

அப்போது எலிசபெத்துக் கும் 13 வயது, பிலிப்புக்கு 18 வயது ஆகும். அந்த சமயத்தில் பிலிப் பிரிட்டன் கடற்படையில் சேர்ந்து இருந்தார். அவர்கள் ஒருவருக்கொருவர் உயிருக்கு உயிராக நேசித்தனர்.

இதையடுத்து 1947-ம் ஆண்டு 6-ம் ஜார்ஜ் மன்னர் சம்மதத்துடன் எலிசபெத்தை பிலிப் திருமணம் செய்தார். திருமணத்துக்கு முன்பு தனது கிரீஸ் டென்மார்க் அரச குடும்ப பட்டத்தை துறந்தார்.

1952-ம் ஆண்டு எலிசபெத் ராணியாக மூடி சூட்டப்பட்டபின் பிலிப் தான் பணியாற்றிய ராணுவ பதவியில் இருந்து விலகினார். பின்னர் பிலிப் இங்கிலாந்து இளவரசராக 1957-ம் ஆண்டு முடிசூட்டப்பட்டார்.

இளவரசர் பிலிப் - ராணி எலிசபெத் இருவரும் அன் யோனியமாக மகிழ்ச்சியுடன வாழ்ந்தனர். அவர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தங்களது 73-வது திருமண நாளை கொண்டாடினர். அவரது மறைவு அரச குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பிலிப் பல்வேறு சமூக மற்றும் தொண்டு சேவைகளில் ஈடுபட்டு வந்தார். 2011-ம் ஆண்டு அவருக்கு இதயத்தில் லேசானஅடைப்பு காரணமாக ஆபரேசன் செய்யப்பட்டு 2017-ம் ஆண்டு தனது 96-வது வயதில் பொது வாழ்க்கை பணியில் இருந்து விலகினார்.

2018-2019-ம் ஆண்டுக்களில் அவருக்கு இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் இளவரசராக நீண்ட காலம் இருந்தவர் பிலிப் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 882
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads