Category:
Created:
Updated:
ஆசிய பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் ஆர். மாகோஸுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (29) காலை மணிலாவில் இடம்பெற்ற நிலையில் அங்கு ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மாளிகையான மலகனெங்க் மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி வரவேற்றார்.
இரு தலைவர்களுக்கும் இடையேயான நட்புறவு பேச்சு வார்த்தைக்கு பிறகு இருதரப்பு பேச்சுவார்த்தை ஆரம்பமானது.