சினிமா செய்திகள்
நயன்தாரா மற்றும் நெட்பிளிக்ஸ் மீது வழக்குத் தொடர்ந்தார் தனுஷ்
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் இந்த திருமணத்தின் வீடியோ ’Nayanthara Beyond the fairy
மகனிடம் இருந்து  கற்றுக் கொண்டேன் - ஜெனிலியா
தமிழில் ஜெனிலியா சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதை வென்றார். இந்த படங்கள் இவருக்கு சினிமாவில
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர் யார் தெரியுமா?
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இதற்கு முன் இந்த பட்டியலில் முதல் இடத்தில் விஜய் இருந்தார். ஆனால், தற்போது வி
தனது வருங்கால கணவர் யார் என வெளிப்படையாக கூறினார் ராஷ்மிகா
புஷ்பா 2 படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகாவிடம் தொகுப்பாளினி, ‘நீங்கள் சினிமாத்துறையில் உள்ளவரை திருமணம் செய்துக் கொள்வீர்களா? அல்லது சி
ராஷ்மிகா தனது காதலர் உடன் ஹோட்டலில் சாப்பிடும் போட்டோ வைரல்
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். அனிமல் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு ஹிந்தியில் அதிகம் ரசிகர்கள
சிவகார்த்திகேயன் மிகவும் திறமையானவர் என தெரிவித்த ரம்யாகிருஷ்ணன்
அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்துள்ளது. உலக அளவில் அமரன் படம் ரூ. 300 கோடி அளவில் வசூல் செய்துள்ளது.சிவக
பொய்யான தகவல்கள் பகிர்வதை தவிர்க்கவும் - ஏஆர்.ரஹ்மான் மகன்
ஏஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்யப்போவதாக சமீபத்தில் அறிவித்த செய்திகள் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.சமூக வலைதளங்களில் இந்த
ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்துக்கான காரணத்தை சொன்ன வக்கீல்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஹாலிவுட் வரை கொடிக்கட்டி பறப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் கடந்த 1995ம் ஆண்டில் சாய்ரா பானு என்பவரை திருமணம் செய
பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதியிடம் கூறிய தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா
கடந்த 2004 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் நடந்த நிலையில், இருவரும் பிரிவதாக முடிவெடுத்து, நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர்.  
 ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து செய்வதாக நேற்று அறிவித்தனர். இதனையடுத்து இந்திய திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. இரு
சிறையில் தூக்கமின்றி தவிக்கிறார் நடிகை கஸ்தூரி
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரி, முதல் நாளில் தூக்கமின்றி தவித்ததாக சொல்லப்படுகிறது. சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட உணவையும் குறைந
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ரிலீஸானது நயன்தாராவின் கல்யாண கேசட்
இயக்குர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்தின் வீடியோ ஒரு ஆவணப்படமாக உருவாக
Ads
 ·   ·  8072 news
  •  ·  5 friends
  • I

    9 followers

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதே நல்லிணக்கத்தின் முதல் படி

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதே உண்மையான நல்லிணக்கத்தின் முதல் படியாக அமையும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி, சர்வஜன நீதி அமைப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் கையெழுத்து திரட்டப்பட்டு வருகின்றது.

இதன் ஓர் அங்கமாக நுவரெலியா, ரிகில்கஸ்கட பகுதியில் இன்று (26) கையெழுத்து திரட்டப்பட்டது. இதில் பங்கேற்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் ஜீவன் தொண்டமான் எம்.பி. கையொப்பம் இட்டார். அதன் பின்னர் நுவரெலியாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜீவன் தொண்டமான்,

" அரசியல் வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உள்ளது. இதற்கமையவே சாணக்கியன் எம்.பி. விடுத்த அழைப்பை ஏற்று மனுவில் நானும் கையொப்பம் இட்டேன்.

இற்றைக்கு 43 ஆண்டுகளுக்கு முன்னர் தற்காலிக தீர்வாகவே பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் போர் முடிவடைந்து பல வருடங்கள் கடந்தும் அந்த சட்டம் நீடிக்கின்றது. இதனை ஏற்க முடியாது. உண்மையான ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தின் முதல்படியாக அச்சட்டத்தை நீக்க வெண்டும்.

இது தொடர்பில் நாம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். பயங்கரவாத தடைச்சட்டத்தை காங்கிரஸ் தற்போது எதிர்க்கவில்லை. முன்னர் இருந்தே எதிர்த்து வருகின்றோம். எமது மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் நீதிமன்றம்கூட சென்றுள்ளார் என்றார்.

  • 389
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads