Category:
Created:
Updated:
தாய்லாந்து, மியன்மார், கம்போடியா ஆகிய நாட்டுத் தலைவர்களுடன் இணைந்து மகாராணியின் முயற்சியில் 2500 வது புத்த ஜயந்தி விழா நடத்தப்பட்டது என்பது பலரும் அறியாத உண்மை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் நினைவு கூர்ந்தார்.
பிரித்தானிய மகாராணியின் மறைவுக்காக மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று (23) வெள்ளிக்கிழமை அனுதாப பிரேரணை சமர்பிக்கப்பட்டது.
இதில் இணைந்து கொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.