சாணக்கியனிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று -08- இடம்பெற்ற, சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
அன்று ஏப்ரல் 21 தாக்குதலைத் தடுக்க முடியாத குழுவினர், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சார்பில் முன்னிலையானவர்கள், அவர்களது அரசியல்நிலைப்பாடுகளுக்காக முன்னிலையானவர்கள், வேறாக ஈழத்தை கோரியவர்கள், இன்று 2021ஆம் ஆண்டு அரசாங்கம் மற்றுமொரு தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிடுகின்றதா? என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தமை தொடர்பிலேயே வாக்குமூலம் பெறப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இவ்வாறு வலியுறுத்தினார்.
அன்று வேண்டுமென்றே மிலேச்சத்தனமான ஏப்ரல் 21 தாக்குதலை தடுக்கத் தவறியவர்கள், தற்போது மீண்டும் தாக்குதலை நடத்த முயற்சிக்கின்றார்களா? என்ற சந்தேகம் எழுவதாகவும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையினால் அமைக்கப்பட்ட காவல் படை தொடர்பில் மாநகர சபை முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்தது சாணக்கியனா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.