Ads
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் காலமானார்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் தனது 99 ஆவது வயதில் காலமானார். பங்கிங்காம் அரண்மணை இதனை அறிவித்துள்ளது.
இதய பிரச்சினை காரணமாக சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளவரசர் பிலிப் அண்மையில் வீடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.
1947ஆம் ஆண்டில் இளவரசி எலிசபெத் அரசியாவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக அவரை இளவரசர் திருமணம் செய்து கொண்டார்.
இளவரசர் பிலிப் பிரிட்டிஷ் அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் சேவையாற்றியவர்.
இளவரசர் பிலிப், கிரேக்க தீவான கோர்ஃபுவில் 1921ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் திகதி பிறந்தார். 1947 ஆம் ஆண்டு ராணி இரண்டாம் எலிசபெத்தை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கும் மகாராணிக்கும் நான்கு பிள்ளைகள், 8 பேரக்குழந்தைகள், 10 கொள்ளுப்பேரப்பிள்ளைகள் உள்ளனர்.
Info
Ads
Latest News
Ads