Category:
Created:
Updated:
இந்த வருடத்தின் இரண்டாம் பாடசாலை தவணை விடுமுறை செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 12 ஆம் திகதி வரையில் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் இரண்டாம் தவணை விடுமுறை 5 நாட்கள் மாத்திரமே வழங்கப்படவுள்ளது.மேலும், மூன்றாம் பாடசாலை தவணை விடுமுறை டிசம்பர் 3 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி மூன்றாம் தவணை விடுமுறை 29 நாட்கள் வழங்கப்படவுள்ளது. அந்தக் காலப்பகுதியில் 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.