பாகிஸ்தான் பெருவெள்ளம்: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு
பாகிஸ்தானில் 3,451.5 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் சேதமடைந்து உள்ளன. 149 பாலங்கள் இடிந்து போயுள்ளன. 170 கடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டன 7.19 லட்சம் கால்நடைகள் உயிரிழந்து உள்ளன என்று தெரிவித்து உள்ளது.
சாலைகளும் மற்றும் பாலங்களும் சேதமடைந்து, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பி செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அவசர தேவைக்கான சுகாதார நலன், காய்கறி சந்தைகள் அல்லது பிற முக்கிய சேவைகளை தேடி செல்வதற்கும், உதவி தேவையான நபர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதற்கான வசதிகளும் கட்டுப்பட்டுத்தப்பட்டு உள்ளன என தெரிய வந்துள்ளது. அந்நாட்டில் தொடர்ந்து மீட்பு, நிவாரண மற்றும் மறுகுடியமர்த்தும் பணிகள் நடந்து வருகின்றன.
வெள்ள பாதிப்புகளால் உருக்குலைந்து போன நிலையில், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான நன்கொடைகளை அளிக்கும்படி ஆளும் அரசு வேண்டுகோள் விடுத்து உள்ளது. வெள்ள பாதிப்புகளை முன்னிட்டு வருங்கால நடவடிக்கைகளை பற்றி ஆலோசிப்பதற்கு அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றையும் இன்று நடத்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்து உள்ளார்.