தந்தையை கட்டையால் அடித்து கொன்ற மகன்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த தளிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரவி (58). அவரது மகன் குமரேசனுக்கு திருமணமாகி இரண்டு வருடங்களாகி உள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு மாடி வீடு மற்றும் ஒரு குடிசை வீடு இருக்கிறது . குமரேசன் மனைவி்க்கும், மாமியார், மாமனார், மருமகளுக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த குமரேசன் தற்போது தனது சொந்த ஊரில் தினசரி வேலைக்கு சென்று வீட்டுக்கு திரும்பும் போது அவரது மனைவி மாமியார், மாமனாருடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.் குமரேசன் தந்தை ரவி, மாடி வீட்டில் ஒரு அறை கொடுத்தால் நானும் என் மனைவியும் தங்கி கொள்வதாக மருமகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் அப்போது இருவருக்கும் வாய்த் தகராறு முற்றவே குமரேசன் அருகில் இருந்த மண்வெட்டி கட்டையை எடுத்து தந்தை ரவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ரவி இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார் நிலையில் உயிரிழந்தார். உடனே குமரேசன், தனது மனைவியுடன் தப்பியோடி விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பரவாக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாகியுள்ள குற்றவாளி குமரேசனை தேடி வருகின்றனர்.