Category:
Created:
Updated:
இலங்கையில் பதவிக்கு வரும் அனைத்து ஜனாதிபதிகளும் பொதுமன்னிப்பை வழங்கின்ற போதிலும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு அவர்கள் கருணை காட்டுவதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி குற்றஞ்சாட்டியுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தண்டனை அனுபவித்து வந்த ரஞ்ஜன் ராமநாயக்க விடுதலை செய்யப்பட்டுள்ள பின்னணியில் தமிழ் அரசியல் கைதிகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போதே முன்னிணியன் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதகிருஷணன் இதனைக் கூறியுள்ளார். நுவரெலியா – தலவாக்கலை பகுதியில் வைத்து நேற்று (28) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.