அரச ஊழியர்கள் தொடர்பில் எரிசக்தி அமைச்சரின் பகிரங்க அறிவிப்பு
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், பெற்றோலிய சேமிப்பு முனையம் என்பவற்றில் 4200 பேருக்கு பதிலாக, அங்குள்ள 500 பணியாளர்களால் திறமையாக பணியாற்ற முடியும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது டுவிட்டர் தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவிக்கையில், மின்சார சபையில் உள்ள 26,000 பணியாளர்களிற்கு பதிலாக அதிலுள்ள அரைவாசி பணியாளர்களால் திறமையாக பணியாற்ற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், திறமையற்ற உறுப்பினர்களால் தொழிற்சங்கங்கள் வளர்கின்றன என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்ள பெரும்பாலான அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது இன்றியமையாதது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அரசியல் தீர்மானங்கள், அரசியல் நியமனங்கள், தவறான நிர்வாகம் மற்றும் திறமையின்மையே அரச நிறுவனங்களின் வீழ்ச்சிக்குக் காரணம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.