அரச ஊழியர்கள் தொடர்பான சுற்றறிக்கை வௌியானது
அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வேதனமற்ற விடுமுறை எடுத்து வெளிநாட்டு வேலைகளுக்குச் செல்வதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவின் கையொப்பத்துடன் கூடிய குறித்த சுற்றறிக்கை கடந்த 22ஆம் திகதி வெளியிடப்பட்டது.
அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு இந்த சுற்றறிக்கையின் விதிகள் பொருந்தும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையின் படி வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்லும் அரச ஊழியர்கள் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை இலங்கைக்கு அனுப்ப வேண்டும். இது ஒவ்வொரு அரசு அதிகாரியின் பணி மூப்பு மூலம் தீர்மானிக்கப்படுகிறது.
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட ஊழியர் தற்காலிகமாக சேவையை விட்டு வெளியேறும்போது, அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு ஊழியர் ஒருவரை நியமிக்கும் முறை இருந்தால் மட்டுமே அது தொடர்பான விடுமுறை பரிசீலிக்கப்படும்.
எந்த சந்தர்ப்பத்திலும் அதற்காக புதிய ஆட்சேர்ப்புக்கான வாய்ப்பே இல்லை.