Ads
யாழ்.மாநகர காவல் படையின் கடமைகளை இடைநிறுத்திய போலீசார்.
யாழ்.மாநகரசபையினால் உருவாக்கப்பட்ட காவல் படை தமிழீழ காவல்துறையின் சீருடையை ஒத்ததாக உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளதாக கூறப்படும் நிலையில், குறித்த காவல்படை தொடர்பில் யாழ்.மாநகரசபை ஆணையாளர், பிரதான வருமான வரி பரிசோதகர் மற்றும் காவல்படையில் இணைக்கப்பட்ட இளைஞர்களிடம் யாழ்.பொலிஸ் நிலையத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து கிடைக்கப்பெற்ற பணிப்பிற்கு அமைய குறித்த சீருடைகளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொலிஸார் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்.மாநகரசபை ஆணையாளரும் நேற்றிரவு யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு பல மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து யாழ்.மாநகர காவல் படையின் கடமைகளை இடைநிறுத்துமாறு பொலிஸாரால் பணிக்கப்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads