Ads
சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கை
மக்கள், நாடு மற்றும் ஜனநாயகத்தின் நன்மைக்காக செயற்படுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அடிப்படைத் தேவைகளுக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை அடக்குவது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்த அடக்குமுறைகள் நிறுத்தப்பட்டு, அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Info
Ads
Latest News
Ads